தமிழ்நாடு, அனைத்துலகப் பொங்குதமிழ்ச் சங்கம் உலகம் போற்றும் வகையில் பல்வேறு பணிகளைச் செய்து வருவது அனைவரும் அறிந்த ஒன்றே. இச்சங்கமானது, தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் புதுவை, கேரளம் முதலான பிற மாநிலங்களில் இருந்தும், இலங்கை, கத்தார், பிரித்தானியா, அமெரிக்கா, சிங்கப்பூர், ரஷ்யா முதலான நாடுகளில் இருந்தும் உறுப்பினர்களை இணைந்து தமிழ்ப்பணி ஆற்றி வருகிறது..
முதல் உலகச் சாதனை நிகழ்வு
பண்ணுருட்டி செந்தமிழ்ச் சங்கம் நடத்திய திருக்குறள் உலகச் சாதனை நிகழ்வாக, திருக்குறளின் 133 அதிகாரங்களை 133 ஆய்வாளர்களுக்குக் கொடுத்து ஆய்வு செய்யப்பட்டு, இணைய வழியாக 32 மணிநேர தொடர் நிகழ்வாக உலகச் சாதனை நிகழ்த்தி, அக்கட்டுரைகளைத் தொகுத்து, 133 அதிகாரங்கள், 133 ஆளுமைகள், 133 ஆய்வுக் கட்டுரைகள் என்னும் தலைப்பில் 464 பக்கங்களுடன் 21. 03. 2021 அன்று நேரடி நிகழ்வாக பண்ணுருட்டியில் வெளியிடப்பட்டது.
அனைத்துலகப் பொங்குதமிழ்ச் சங்கத் துவக்கம்
இவ்வாய்வாளர்கள் 133 பேரைக் கொண்டு ஓர் அமைப்பை உருவாக்க வேண்டும் என்று, கோவை திருப்பேரூர் ஆதினம், திருக்கயிலாய மரபு மெய்கண்டார் வழிவழி குருமகா சந்நிதானங்கள் கயிலைப் புனிதர் திருப்பெருந்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார் அவர்களின் வேண்டுகோளுக்கினங்க, குருமகா சந்நிதானங்களை கௌரவத் தலைவராகக் கொண்டு தமிழ்நாடு, அனைத்துலகப் பொங்குதமிழ்ச் சங்கம் 2021 ஆம் ஆண்டு சித்திரைத் திங்கள் முதல் நாள் துவங்கப்பட்டது.
அனைத்துலகப் பொங்குதமிழ் சங்கத்தினர் அனைவரும் ஒன்றிணைந்து உலகம் முழுவதும் உள்ள தமிழ் ஆர்வளர்களின் உறுதுணையோடு, பன்னாட்டளவில் கவியரங்கங்கள், கருத்தரங்கங்கள், பயிலரங்கங்கள், பேச்சரங்கங்கள், நூலாய்வரங்கங்கள், கவிதைத் திருவிழா, விவாத மேடை, திறன்மேம்பாட்டுப் பட்டறை என அனைத்தையும் இணையத்தின் வாயிலாகச் சிறப்பான முறையிலும் பல்லோர் போற்றும் வகையிலும் நடந்தி வருகிறோம்.
இரண்டாவது உலக சாதனை நிகழ்வு
இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அனைத்துலகப் பொங்குதமிழ்ச் சங்கம், 20 காப்பியங்களைக் கையில் எடுத்து, அவற்றில் உள்ள 200 கதைமாந்தர்களைத் தேர்வு செய்து, 200 ஆய்வாளர்களுக்குப் பகிர்ந்தளித்து, ஆய்வு செய்யப்பட்ட கட்டுரைகளை இணைய வழியாக 40 மணிநேரம் தொடர் நிகழ்வாக கருத்தரங்கங்கள் நிகழ்த்தி இரண்டாவது உலக சாதனை படைத்தது.
இணைய வழியாக அரங்கேற்றம் செய்யப்பட்ட கட்டுரைகளைத் தொகுத்து, காப்பிய மாந்தர்கள் தொகுதி 1 மற்றும் 2 என இரண்டு என நூலாக்கம் செய்து 28.11.2021 அன்று கோவை திருப்போரூர் ஆதினத் திருமடத்தில் சிறப்பான முறையில் வெளியீட்டு சாதனை படைத்தோம்.
மூன்றாவது உலக சாதனை நிகழ்வு
திண்டிவனத்தில் 12.06.2022 அன்று நேரடி நிகழ்வாகக் கொண்டாடப்பட்டது. அங்கு, சாதனைப் படைத்த 100 மகளிரின் புகழைப் பறைசான்றும் விதமாக, 100 ஆய்வாளர்களிடம் இருந்து கட்டுரைகள் பெறப்பட்டு அவற்றை நூலாக்கம் செய்து மாண்புடை மகளிர் என்னும் தலைப்பில் நூல் வெளியிட்டுச் சிறப்பித்தது.
புதுவையில் நேரடி நிகழ்வு
அடுத்த நேரடி நிகழ்வு, புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் 13.11.2022 அன்று கொண்டாடப்பட்டது. இவ்விழாவில், வாணிதாசனாரின் நூல்களை ஆய்வு செய்யும் முகமாக, 51 தலைப்புகளைப் பகிர்ந்தளித்து, ஆய்வு செய்யப்பட்ட 51 ஆய்வாளர்களின் கட்டுரைகளைத் தொகுத்து, பன்முகப் பார்வையில் கவிஞரேறு வாணிதாசன் என்னும் தலைப்பில் 279 பக்கங்கள் கொண்ட நூலை வெளியிட்டு மகிழ்ந்தது.
நான்காவது உலக சாதனை
இலக்கிய வரலாறு என்னும் தலைப்பில் ஒவ்வொருவருக்கும் ஒரு தலைப்பு எனக் கொடுக்கப்பட்டு, அவர்கள் ஆய்வு செய்து தொகுத்த கட்டுரைகளை (12.03.2023) அன்று இனைய வழியாக 16 மணிநேரம் பன்னாட்டளவில் கருத்தரங்கம் நிகழ்த்தப்பட்டது. இக்கட்டுரைகள் தொகுக்கப்பட்டு இலக்கிய வரலாறு தலைப்பில் நூலாக்கம் செய்யப்பட்டது.
திருக்கழுக்குன்ற நேரடி நிகழ்வு
இதனைத் தொடர்ந்து 25.04.2023 அன்று திருக்கழுக்குன்றத்தில் அனைத்துலகப் பொங்குதமிழ்ச் சங்கம், திருக்கழுக்குன்றம் அன்னை தெரசா கலை மற்றும் அறிவியல் கல்லூரி. வேலூர் தனபாக்கியம் கிருஷ்ணசாமி முதலியார் மகளிர் கல்லூரி (தன்னாட்சி) இணைந்து நடத்திய பன்னாட்டுக் கருத்தரங்கங்கில் தொகுக்கப்பட்ட கட்டுரைகளை இந்திய இலக்கியங்களில் தகவல் தொடர்பு என்னும் தலைப்பில் நூலாக்கம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.
ஐந்தாவது உலக சாதனை
அஞ்சல் அட்டையில் உரை எழுதும் நிகழ்வாக. 1330 குறட்பாக்களை ஒருவருக்கு ஒரு குறள் வீதம், பேராசிரியர்கள், முனைவர்கள், ஆசிரியர்கள், கல்லூரி மற்றம் பள்ளி மாணவர்கள், தமிழ் ஆர்வளர்கள் என அனைவருக்கும் பகிர்ந்தளித்து, உரை எழுதச் செய்து, அவர்களிடம் இருந்து பெறப்பட்ட 1330 உரைகளைத் தொகுத்து திருக்குறள் (ஒரு குறள் ஒரு உரை) என்னும் தலைப்பில்தலைப்பில் நூலாக்கம் செய்யப்பட்டது.
மூன்றாவது ஆண்டு துவக்க விழா
அனைத்துலகப் பொங்குதமிழ்ச் சங்கத்தின் மூன்றாவது ஆண்டு துவக்க விழா, 25.06.2023 அன்று மாமல்லபுரத்தில் நேரடி நிகழ்வாகக் கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் இலக்கிய வரலாறு, திருக்குறள் (ஒருகுறள் ஓர் உரை) ஆகிய நூல்கள் வெளியிடப்பட்டன.
நாமக்கல் நேரடி நிகழ்வு
நாமக்கல் கவிஞரின் 135 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, நாமக்கல் கவிஞர் அவர்களின் நூல்கள் ஆய்வு செய்யும் நோக்கில் “பன்முகப் பார்வையில் நாமக்கல் வெ.இராமலிங்கம்பிள்ளை” என்னும் தலைப்பில் ஆய்வு செய்யப்பட்டு, அக்கட்டுரைகள் தொகுக்கப்பட்டு 15.10.2023 அன்று நூலாக்கம் செய்து வெளியிடப்பட்டது.
தூத்துக்குடியில் நேரடி நிகழ்வு
தேசிக விநாயகம் பிள்ளை அவர்களின் நூல்கள் ஆய்வு செய்யும் நோக்கில், "பன்னோக்குப் பார்வையில் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை" என்னும் தலைப்பில் தூத்துக்குடியில் (01.12.2023) அன்று நடைபெற்ற நேரடி நிகழ்வில் வெளியிடப்பட்டது.
ஆறாவது உலக சாதனை
2024 ஆம் ஆண்டு தாய்மொழி தினத்தை கொண்டாடும் பொருட்டு, உலகில் உள்ள பல்வேறு கவிஞர்களைத் திரட்டி, தாய்மொழி குறித்து கவிதைகள் எழுதச் செய்து. மாபெரும் உலகச் சாதனை நிகழ்த்த வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில், 2024 கவிஞர்களிடம் இருந்து பெறப்பட்ட 2024 கவிதைகளைத் திரட்டி, ‘தாய்மொழி’ என்னும் தலைப்பில் 1100 பக்கங்களில் நூலாக்கம் செய்யப்பட்டது.
நான்காம் ஆண்டுத் துவக்க விழா
அனைத்துலகப் பொங்குதமிழ்ச் சங்கத்தின் நான்காம் ஆண்டு துவக்க விழா, 14.07.2024 அன்று விழுப்புரத்தில் நேரடி நிகழ்வாகக் கொண்டாடப்பட்டது. இதில், தாய்மொழி, பன்முகப் பார்வையில் பாவலர் சுந்தரபழனியப்பன் ஆகிய நூல்கள் வெளியிடப்பட்டன.
சிவகங்கையில் நேரடி நிகழ்வு
அடுத்த நேரடி நிகழ்வாக 10.11.2024 அன்று சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் நடைபெற்றது. இங்கு பன்னோக்குப் பார்வையில் சிற்றிலக்கியங்கள், வீரத்தமிழச்சி வேலுநாச்சியார் கவிதைத் தொகுப்பு, நாண்மங்கல நாயகர் திருப்பெருந்திரு இராமசாமி அடிகளார் கவிதைத் தொகுப்பு ஆகிய நூல்கள் வெளியிடப்பட்டன.
அனைத்துலகப் பொங்குதமிழ்ச் சங்கம் வெளியிட்ட நூல்கள்
இதுவரை தமிழ்நாடு, அனைத்துலகப் பொங்குதமிழ்ச் சங்கத்தின் வாய்லாக,
முதலான நூல்களை வெளியிட்டுள்ளோம் என்பதில் பெரும் மகிழ்ச்சி கொள்கிறோம்.
சங்கத்தின் சார்பில் வெளியிட்ட சங்கம் சாரா பிற நூல்கள்
அனைத்துலகப் பொங்குதமிழ்ச் சங்கம், சங்க நூல்கள் மட்டுமன்றி, சங்க உறுப்பினர்கள் மற்றும் பிற நூலாசிரியர்களின் 150க்கும் மேற்பட்ட நூல்கள் வெளியிட்டுப் பெறுமைப்படுத்தியுள்ளது.
இத்தகைய ஆக்கம் தரும் செயல்களைச் செய்துவரும் தமிழ்நாடு அனைத்துலகப் பொங்குதமிழ்ச் சங்கத்தோடு நீங்களும் இணைந்து தமிழ்ப்பணி ஆற்ற வாரீர்.
மாநில சங்க உறுப்புனர்கள்
தலைவர்
பாலவர் சுந்தரபழனியப்பன், பண்ணுருட்டி
பொதுச்செயலாளர்
முனைவர் ஞா. சுஜாதா, வேலூர்
செயலாளர்
முனைவர் அ. பாரதிராணி, காரைக்குடி
பொருளாளர்
முனைவர் க. அரிகிருஷ்ணன், இரட்டணை
நிர்வாகச் செயலாளர்
மதிப்புறு முனைவர் ஆ. இராஜேஸ்வரி, கோவை
முதன்மைச் செயலாளர்
தமிழ்மணி சுப்ரமணியன், கரூர்
மேலாண்மைச் செயலாளர்
பாப்பாக்குடி அ. முருகன், திருநெல்வேலி
,
தனித்தமிழ் மேம்பாட்டுச் செயலாளர்
கவிஞர் ச.ம. மாசிலாமணி, திருத்தணி
பள்ளி கல்வி மேம்பாட்டுச் செயலாளர்
கவிஞர் ப. சத்யா, காரைக்கால்
முத்தமிழ் மேம்பாட்டுச் செயலாளர்
கவிஞர் அ. பாண்டு, பண்ணுருட்டி
கல்லூரி கல்வி மேம்பாட்டுச் செயலாளர்
முனைவர் ஏ. யோகசித்ரா, இராணிப்பேட்டை
கொள்கை விளக்கச் செயலாளர்
கவிஞர் அ. ஜீவா, சேலம்
புதுவை, காரைக்கால் மாநிலப் பொறுப்பாளர்
கவிஞர் சீதாகலியபெருமாள், சேத்தூர்
இளையோர்த்திறன் மேம்பாட்டுச் செயலாளர்
கவிஞர் ஷே. ஜெரினா, மூங்கில்துறைப்பட்டு
மக்கள் தொடர்புச் செயலாளர்
கவிஞர் சித்ரா இளஞ்செழியன், திருச்சி
தகவல் தொழில்நுட்பச் செயலாளர்
கவிஞர் க. ஆனந்த், வேலூர்
அயலக ஒருங்கிணைப்புச் செயலாளர்
முனைவர் மா. விஸ்வநாதன், அமெரிக்கா
துணைத் தலைவர்
கவிஞர் வாசுகி தமிழ்மணி, கரூர்
துணைத் தலைவர்
கவிஞர் இரா. வீரமணி, விழுப்புரம்
துணை செயலாளர்
கவிஞர் ஈ. லிங்கன், நீலகிரி
துணை செயலாளர்
முனைவர் சு. பாரதிதமிழ்முல்லை, சிதம்பரம்