Sunday, 20 June 2021

அனைத்துலகப் பொங்குதமிழ்ப் பேரவை மற்றும் தமிழக அரசின் அகரமுதலி திட்டம் இணைந்து நடத்தும் ''தூய தமிழ் உரைவீச்சரங்கம்'' அனைவரும் நிகழ்வில் இணைந்து பயன்பெறுங்கள்

பேரன்புடையீர்! வணக்கம்.

அனைத்துலகப் பொங்குதமிழ்ப் பேரவை தமிழக அரசின் அகரமுதலி திட்டம்  இணைந்து நடத்தும் இணையவழி இயங்கலை மற்றும் வலையொளிவழியாக பன்னாட்டளவிலான உரைவீச்சரங்கம்

தலைப்பு: கருத்தாடலில் தூய தமிழ்

நாள் : 25/6/2021

நேரம் : மாலை 5.00 மணி

பள்ளி/ கல்லூரி மாணவர்கள் முதலில் பதிவு செய்வோர் மட்டும்.

1. ஒருவர் ஒரு தலைப்பு மட்டும் தேர்ந்தெடுக்கவும்.ஒருவர் தேர்ந்த தலைப்பினை மற்றவர்கள் தேர்வு செய்ய இயலாது.


2.நம் பேரவை பள்ளி/ கல்லூரி ஆசிரியர்கள் முதலில் பதிவு செய்பவர்களுக்கு வாய்ப்பு தரப்படும்.


குறிப்பு

உரைவீச்சரங்கில் கலந்து கொள்ள விழைவோர் கவனத்திற்கு,

தரப்பட்டிருக்கும் தலைப்பினை ஒட்டி மூன்று நிமிடம் மட்டும் தூய தமிழில் உரை நிகழ்த்த வேண்டும்.

இந்த புலனக்குழுவில் உங்கள் பெயர்( தமிழில்), மாவட்டம் மற்றும் தலைப்பினைக் குறிப்பிட்டு பதிவு செய்யுங்கள்.

பதிவு கட்டணம் இல்லை.

அனைவருக்கும் மின்சான்றிதழ் வழங்கப்படும்.

தலைப்பு

ஒருவர் தேர்ந்தெடுத்த தலைப்பினை மற்றொருவர் வழியாக கொள்வதனைத் தவிர்த்திடுங்கள்.

கருத்தாடலில் /உரையாடலில்...


1.பேருந்து நிலையங்களில்

2.விமான நிலையங்கள்

3.வாகனங்கள் பழுதுபார்க்கும் இடங்களில்

4.தேநீர் கடைகளில்

5.பழக்கடைகளில்

6.உணவு விடுதிகளில்

7.பல்பொருள் அங்காடிகளில்

8.பொருட்காட்சி கூடங்கள்

9..அருங்காட்சியகங்கள்

10.நகராட்சி/பேரூராட்சி/ ஊராட்சி அலுவலகங்களில்

11.அறிவியல் ஆய்வுக் கூடங்கள்

12.வகுப்பறையில்

13.நண்பர்களுடன்

14.உறவினர்களுடன்

15.விளையாட்டு அரங்கங்கள்

16.வீடுகளில்

17.கணினி நிலையம்

18.மருத்துவமனைகள்

19.சுகாதார நிலையங்கள்

20.தொலைகாட்சி நிலையங்கள்

21.பத்திரிகை அலுவலகங்கள்

22.வேளாண்மை பண்ணைகள்

23.மென்பொருள் அலுவலகங்களில்

24.இணைய ஊடக வழியான உரையாடலில்

25.துறைசார்ந்த உரையாடலில்


வாழ்த்துகள்

💐💐💐💐💐


தலைவர்

செயலாளர்

பொருளாளர்

அனைத்துலகப் பொங்குதமிழ் பேரவை